திருத்துறைப்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் ஏழைகளுக்கு ஆடைகள்

ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில் ஏழைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

நாகை மாவட்டம் கீழையூர் ராம்கோ தொண்டு நிறுவனத்தில் ரோட்டரி கிளப் ஆப் திருத்துறைப்பூண்டி சார்பில் தீபாவளி திருநாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், செயலாளர் சோமசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

இந் நிகழ்ச்சிக்கு துணை ஆளுநர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சுமார் 35 பயனாளிகளுக்குசங்க உறுப்பினர்கள் பங்களிப்புடன் ரூபாய் 40 ஆயிரம் மதிப்பில் ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பிக்க ப்பட்டது.

முன்னாள் ஆளுநர் ஆர்.எஸ். ஆர் இளங்கோவன் உணவுகளையும் வழங்கினார்.

இதில் முன்னாள் தலைவர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்க பொருளாளர் பத்மநாதன்நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் செல்வம் மற்றும் எழிலரசி ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com