கயத்தாறு அருகே மனைவியுடன் தகராறு-போலீஸ் நிலையத்திற்கு கத்தியுடன் வந்த தொழிலாளி கைது
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ் (வயது 32). தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த கன்னியம்மாள் (25) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு
இவர்களின் திரும ணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மருதராஜும், கன்னியம்மா ளும் தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதில் கன்னியம்மாள் கோபித்து கொண்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதராஜ், கன்னியம்மாளை தாக்கியதாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து கன்னியம்மாள் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக மருதராஜை போலீசார் அழைத்துள்ளனர். அப்போது அவர் தனது மனைவியை தாக்கும் நோக்கில் கத்தியை மறைத்து வைத்திருந்தார்.
இதையறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் பால் துரிதமாக செயல்பட்டு மருதராஜை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை கைப்பற்றினார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மருதராஜை கைது செய்தனர்.

