வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது.இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி நிலுவையில் உள்ளது. நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை மற்றும் குத்தகை தொகையை செலுத்தகோரி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரியினங்கள், கடை வாடகை ஆகியவற்றை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதையடுத்து நகராட்சியில் வரியினங்களை செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்தும், வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com