நெல்லை மாநகர பகுதிகளில் 10 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது10 வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர்.
நெல்லை மாநகர பகுதிகளில் 10 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது.

சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாததற்காக பாளை மண்டல பகுதியில் 3 வீடுகள், மேலப்பா ளையம் மண்டல பகுதியில் 2 வீடுகள் உள்பட மொத்தம் 10 வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் துண்டித்தனர். மேலும் இதுகுறித்து கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், வரி செலுத்துபவர்கள் நலனுக்காக வரி வசூல் மையங்கள் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட் டண வரியை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com