சாத்தான்குளம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன்மேளா

புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது.இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன்மேளா
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். புத்தன்தருவை ஊராட்சி தலைவி சுலைகா, துணைத்தலைவர் பிர்தோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர் ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் கடனுதவியும், 2 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த 24 உறுப்பினர்களுக்கு ரூ.18 லட்சம் கடனுதவியும், 4 விவசாயி உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.4 லட்சத்து 38 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் கடனுதவி பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. புதிதாக 'அ' வகுப்பு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். உறுப்பினர்களுக்கு நிதியியல் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க செயலர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com