பாவூர்சத்திரம் அருகே விற்பனைக்காக லாட்டரி சீட்டு பதுக்கிய மாற்றுத்திறனாளி கைது-ரூ.1.11 லட்சம் மதிப்பிலான சீட்டுகள் பறிமுதல்

கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மாரிபாண்டியிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரியை படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரியை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மூன்று சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கீழப்பாவூர் எஸ்.கே.தெருவை சேர்ந்த மாரிபாண்டி (வயது 40) என்பது தெரியவந்து.

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 2,700 லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com