

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பக்தர்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர்.மேலும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்மன் வீதி உலா, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
மஞ்சள் நீர் மண்டகப்படி இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணியளவில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்தியங்கள் நடை பெற்றன.இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர்.அதனை தொடர்ந்து அம்மன் 4 ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.
அதன் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பிரார்த்தனை மண்டபம் வந்தடைந்தது.
அங்கு அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு அம்மன் திருக்கோவில் சென்றடைந்தது. அதனை தொடர்ந்து இன்று மாலை கோவில் கலையரங்கத்தில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.