கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தொடங்கியது
பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டைமாரியம்மன் தேர் நீந்தி சென்ற காட்சி
பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டைமாரியம்மன் தேர் நீந்தி சென்ற காட்சி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று தொடங்கியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திருவிழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே தமிழகத்தில் வழிபாட்டு தலங்களுக்கு வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் பூத்தேர் வீதி உலா நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் ஏற்பட்டது.

கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த பூத்தேரில் கோட்டை மாரியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க முன்னால் விநாயகர், முருகன், அய்யப்பன் ஆகியோர் எழுந்தருளி காட்சியளித்தனர். சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு பூக்களை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர்.

பூத்தேர் ஊர்வலம் தொடங்காததால் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் வீதிஉலா நடத்த வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர். டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகளுடன் வீதிஉலா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி வழக்கமாக தேர் நின்று செல்லும் வழியில் எங்கும் நிற்காது. பூக்களை பின்னால் வரும் லாரியில் மட்டுமே காணிக்கையாக வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பூத்தேர் ஊர்வலம் கோவிலிலிருந்து புறப்பாடாகி வழக்கமாக செல்லும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலுக்குள் வந்தடைந்தது.

பூத்தேர் ஊர்வலம் நடைபெறுமா? நடைபெ றாதா? என்ற குழப்பத்தில் இருந்த நிலையில் நகரில் அம்மன் வீதிஉலா நடந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்து மனமுருக வழிபட்டுச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com