திண்டுக்கல் வங்கி அலுவலகம் மூடல்

ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் திண்டுக்கல் வங்கி மூடப்பட்டது
மூடப்பட்ட வங்கி அலுவலகம்
மூடப்பட்ட வங்கி அலுவலகம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நேருஜி நகரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் வங்கிக்கு வந்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர். மேலும் மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று காரணமாக வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கியில் கடந்த 2 நாட்களாக வந்து சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com