தருமபுரி, கிருஷ்ணகிரியில் போலீசார் தீவிர வாகன சோதனை

போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.தடுப்பு அமைத்து பைக், கார் போன்ற வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்ததன் எதிரொலியாக தருமபுரி மாவட்டம் பாளையம் புதூர் சுங்கச்சாவடியில் தொப்பூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் 4 ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்ததன் எதிரொலியாக தருமபுரி மாவட்டம் பாளையம் புதூர் சுங்கச்சாவடியில் தொப்பூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Published on

தருமபுரி,

திருவண்ணாமலையில் நேற்று ஒரே இரவில் 4 ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீசார் இன்றுகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாவட்ட எல்லை மற்றும் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவட்டங்களில் முக்கிய இடங்களில் தடுப்பு அமைத்து பைக், கார் போன்ற வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com