மதிகோன்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது வாகன சோதனையில் போது சிக்கினார்

தரு-மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 அப்போது நேற்று மதிகோன்பாளையம் சப்&இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் மூக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வெள்ளை பையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரிசாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டன் (வயது31) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com