தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

தருமபுரியில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
.
.
Published on

தருமபுரி,

தருமபுரி அருகேயுள்ள  இண்டூர் பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா  (வயது 39). கூலித்தொழிலாளிகள். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சங்கீதா மனமுடைந்து சம்பவத்தன்று தனது உடல் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதேபோல தருமபுரி அருகேயுள்ள பொம்மிடி போலீஸ் சரகம் சிப்பிரெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 21) என்ற பட்டதாரி வாலிபர் குடும்ப பிரச்சனையால் சம்பவத்தன்று எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com