

தருமபுரி,
திருப்பூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி-பென்னாகரம் மேம்பாலம் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தருமபுரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.