நல்லம்பள்ளி அருகே பிறந்து 5 நாளே ஆன ஆண் குழந்தை திடீர் சாவு

நல்லம்பள்ளி அருகே பிறந்து 5 நாட்களே அன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது.
.
.
Published on

நல்லம்பள்ளி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தின்னஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(வயது30) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி யோகப்பிரியா(20). கடந்த ஆண்டு இவர்களுக்கு  திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கர்ப்பமுற்ற யோகப்பிரியாவுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  பின்பு அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றனர். 

இந்நிலையில் நேற்று குழந்தைக்கு பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.இதனால் பதட்டமடைந்த பெற்றோர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com