விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

தருமபுரி கோர்ட்டில் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை வருகிற மார்ச் 21ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
.
.
Published on

தருமபுரி:

தருமபுரியில்  கடந்த 2015ம் ஆண்டு தே.மு.திக. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்- அமைச்சர் ஜெயலலலிதா, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் காவேரிவர்மன் ஆஜராகி இருந்தார்.  இந்த வழக்கை வருகிற மார்ச் 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com