5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தருமபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி, குழந்த
தருமபுரி பஸ் நிலையத்தில் இன்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி, குழந்த
Published on

தருமபுரி:

 தருமபுரி அரசு புறநகர் பஸ் நிலையத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட  கலெக்டர் திவ்யதர்சினி போலியோ சொட்டு மருந்து வழங்கினார் 

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்று (27-ந் தேதி) தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

முகாமில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், அரூர், கடத்தூர், மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. 

குறிப்பாக பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த பணியில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com