கம்பைநல்லூர் அருகே குழந்தை இறந்த துக்கத்தில் தாய் மாயம் கணவர் போலீசில் புகார்

குழந்தை இறந்த துக்கத்தில் தாய் வீட்டைவிட்டு வெளியே சென்றால் வீடு திரும்பாததால் அவரது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
மாயமான ஜெயஸ்ரீ
மாயமான ஜெயஸ்ரீ
Published on

கம்பைநல்லூர்:

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்து உள்ள  கொங்கரப்பட்டி  ஊராட்சியில்     கால்சானூர் கிராமத்தைச் சேர்ந்த  அருண்குமார். இவரது  மனைவி ஜெயஸ்ரீ (வயது  19).   இவரது  செல்ல  மகள்  வர்ஷா (2)  கடந்த  ஒரு மாதத்திற்கு முன்பு  இறந்து விட்டார்.

இதனால் துக்கம்  தாங்காமல் தவித்து  வந்த ஜெயஸ்ரீ திடீரென  கடந்த 28&ந் தேதி வீட்டை விட்டு வௌ¤யே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அருண்குமார், மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார்.  ஆனால்  காணவில்லை.

இதையடுத்து அவர் கம்பைநல்லூர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.  இது குறித்து  சப்&இன்ஸ்பெக்டர்  கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com