

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள மடம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி வினிதா.
இவர் இன்று காலை தருமபுரி கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அப்போது வினிதா தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அருகில் இருந்த போலீசார் உடனே அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-
நான் எங்களது கிராமத்தில் அருகேயுள்ள 2 பேரிடம் 50 சென்ட் நிலம் வாங்க ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் பணத்தை பெற்று கொண்டு இதுவரை நிலத்தை பதிவு செய்து தரவில்லை.
இதனால் அவர்களிடம் நான் பலமுறை கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. நான் வாங்கிய நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க முயற்சிக்கிறார்கள்.
இது தொடர்பாக நான் பென்னாகரம் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த வித ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் இன்று கலெக்டர் அலுவலகம் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.