

தருமபுரி,
‘‘முருங்கைக்காய்’’ என்றாலே அனைவருக்கும் நடிகர் பாக்கிய ராஜின் ‘‘முந்தானை முடிச்சு’’ படம்தான் நினைவுக்கு வரும். இந்த படம் வௌ¤யான பிறகு முருங்கைக்காயின் மகத்துவம் பலருக்கு புரிய ஆரம்பித்தது. இதனால் தான் இல்லத்தரசிகளின் சமையலில் பிடித்த காயாக முக்கிய இடம் வகிப்பது முருங்கைக்காய்.
முருங்கைக்காய் சாம்பாருக்கு தனி வாசம் உண்டு. தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கிய அங்கம் வகிப்பது முருங்கக்காய் என்றால் அது மிகையாகாது.
காய் வகைகளில் தனிச்சிறப்பு வாய்ந்த இந்த முருங் கைக் காய், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மர முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. செடி முருங்கை கரூர் மாவட்டத்தில் குறிப்பாக அரவக்குறிச்சியில் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது
அரவக்குறிச்சியில் சாகுபடி செய்யப்படும் முருங்கைகாய் தருமபுரி மாவட்டத்திற்கு அதிகப்படியாக விற்பனைக்கு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரி காய்கறி மார்க்கெட்டில் ஒரு முருங்கைக்காய் 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு கிலோ முருங்கைக்காய் 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது.
வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டுமே முருங்கைக்காய் சமையலில் இடம்பிடித்தது. ஆனால் அதேநேரத்தில் முருங் கைக்காய் விலை ‘ராக்கெட்’ வேகத்தில் சென்றதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் புலம்பி கொட்டி தீர்த் தனர்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் வெண் பூச்சிகளின் தாக்குதலால் முருங்கை விளைச்சல் பெருகும் பாதிப் படைந்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செடி முருங்கை விளைச்சல் அமோகமாக உள்ளதால் தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு அரவக்குறிச்சி முருங்கை காய் வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி தினசரி காய்கறி மார்க்கெட் உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் முருங்கைக் காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.