தொப்பூர் கணவாயில் சிமெண்ட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது

நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையோரம் டேங்கர் லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
சாலையோரம் டேங்கர் லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

தருமபுரி:

ஆந்திர மாநிலத்திலிருந்து  அரக்கோணத்தை சேர்ந்தவர் தேவசிகாமணி (வயது35).  டேங்கர் லாரி டிரைவரான  இவர் சிமெண்ட் பாரம் ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் 2-வது வளைவில்  வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தால் ஓட்டுனர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய ஓட்டுநர் தேவசிகாமணியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com