நல்லம்பள்ளி அருகே விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
.
.
Published on

நல்லம்பள்ளி, 

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புறவடை ஜங்ஷன் அருகில் நேற்று மாலை  கிருஷ்ணகிரியில் இருந்து காற்றாழை இறக்கையை ஏற்றி கொண்டு லாரி வந்தது.

பீமாசி கவுண்டன்கொட்டாயை சேர்ந்த சக்திவேல் (23) மிட்டாநூல அள்ளியை சேர்ந்த முத்தரசன் என்பவரும் நல்லம் பள்ளியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இந்த நிலையில் புறவடை ஜங்சன் அருகில் வந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இவர்கள் வேகமாக லாரியை கடக்க முயன்றனர். அப்போது இவர்கள் இருவரும் லாரியின் பின்பக்க சக்கரத்தில் மாட்டி கொண்டனர்.

இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். முத்தரசனுக்கு பலத்த காயம் ஏற் பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான்கோட்டை போலீசார் பலத்த காயமடைந்த முத்தரசனை மீட்டு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விபத்தில் இறந்த சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com