தருமபுரியில் குட்கா பதுக்கியவர் கைது

தருமபுரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்
.
.
Published on

நல்லம்பள்ளி:

தருமபுரி அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து  விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் அந்த பகுதியில் விற்கப்படும் குட்காவை வாங்க வந்திருப் பதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த நபரை பிடித்து வைத்துக்கொண்டு குட்கா விற்கப்படும் இடத்தை காட்டுவற்காக அழைத்து சென்றனர்.

அப்போது அந்த நபர், ஒட்டப்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அங்கு 25 கிலோ குட்கா வீதம் 45 பைகள் இருந்தது. அதாவது மொத்தம் 900 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது நல்லம்பள்ளி அருகே உள்ள நூல அள்ளி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் (வயது 43) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் 900 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com