தருமபுரியில் மதுவிலக்கு வேட்டையில் 41 பேர் கைது

தருமபுரியில் போலீசார் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 41 பேர் கைதுசெய்யப்பட்டார்கள்.
.
.
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் அந்த போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வேட்டையில் தர்மபுரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அப்பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்ளதாக 6 பேரும், அரூரில் 15 பேரும், பென்னாகரத்தில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதேபோன்று தர்மபுரி மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நடத்திய இந்த மதுவிலக்கு வேட்டையில் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மதுவிலக்கு வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது முறைகேடாக மது விற்பவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com