அரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
.
.
Published on

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கெளாப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது40). இவரது மகள் தர்சினி (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அன்று அவர் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இது குறித்து பெருமாள் அரூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com