10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
.
.
Published on

அரூர், 

தருமபுரி மாவட்டம், அரூர்  பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து மாணவி தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மாணவியின் வீட்டின் அருகே வசிக்கும் நவாப்ஜான் (வயது20) என்பவர் மாணவி அவரது தோழி இருவரையும் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி அழைத்து சென்றார். 

பின்னர் சிறிது தூரம் சென்றதும் மோட் டார் சைக்கிளில் இடம் போதுமானதாக இல்லை. அதனால் முதலில் தோழியை வீட்டில் விட்டு விட்டு பின்னர், மாணவியை அழைத்து செல்வதாக கூறி சென்றுள்ளார். 

அப்போது போகும் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய நவாப்ஜான், மாணவியை அருகே இருந்த முட்பு தருக்குள் தூக்கி சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் மாணவி கூச்சல் போட்டதும், அவரது தோழி அங்கு சென்று பார்த்ததுள்ளார். இதையடுத்து நவாப்ஜான் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இது குறித்து கோட்டப் பட்டி போலீசில் மாணவியின் தோழி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நவாப்ஜானை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com