இளம் பெண் மாயம்

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே பெற்றோர் வீட்டிற்கு சென்று வருதவதாக கூறிவிட்டு சென்ற இளம் பெண் மாயமாகினார்.
.
.
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது35). கோயம்புத்தூரில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவசக்தி (22). இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.

இந்த நிலையில் சிவசக்தி கடந்த 4&ந் தேதி பண்டஅள்ளியில் இருந்து  காரிமங்கலம் அருகே  நரிய நள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்து முனிவேல் இண்டூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com