விஷம் குடித்து பெண் தற்கொலை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கள்ளிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 50). 

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com