தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

தருமபுரி பூ மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
பூக்கள் வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
பூக்கள் வாங்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.
Published on

தருமபுரி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறி ஒமிக்ரான் உருவில் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் தமிழக அரசு வழிபாட்டுத் தலங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்வது வெகுவாக குறைந்திருந்தது.

இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால் பூவின் விலை சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று தர்மபுரி பூ மார்க்கெட்டில் கிலோ 50 ரூபாய்க்கும் விற்ற சாமந்திப்பூ 100-க்கும், சம்பங்கி 20 ரூபாயிலிருந்து 40-க்கும்,  அலரி 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய்க்கும், குண்டுமல்லி 1000 ரூபாய்க்கும், காக்கனாம் பூ 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 40 ரூபாய்க்கும், செண்டுமல்லி 20 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com