தக்காளி விலை சரிவு

தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கிடுகிடுவென விலை சரிந்தது.
.
.
Published on

கடத்தூர்:

தருமபுரி மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்துள்ளனர். கடந்த வாரங்களில் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது கிடுகிடுவென விலை சரிந்து ஒரு பாக்ஸ் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கடத்தூரை சுற்றியுள்ள சுமார் 40&க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து தக்காளி பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விளைந்த தக்காளிகளை கடத்தூரில் உள்ள மண்டிகள்,கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கடத்தூரில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி விலை சரிந்து இன்று ஒரு பாக்ஸ் 70 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com