.
.

குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி தற்கொலை

தருமபுரி மாவட்டம் வரகூரில் குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
Published on

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் புலிக்கரை அருகே வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் ரஞ்சித், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை மனைவி கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த ரஞ்சித், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com