

தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பரவலாக பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டமின்றி கடைவீதிகள் வெறிச் சோடி யது.
தருமபுரி பஸ் நிலையம், நால்ரோடு, கடைவீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
மேலும் முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். மேலும் தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, தொப்பூர், அரூர், மாரண்டஹள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஒகேனக்கல், பென்னாகரம், மற்றும் பாப்பி ரெட்டிப் பட்டி, பொம்மிடி, துறிஞ்சிபட்டி, பள்ளிப்பட்டி , பையர் நத்தம், வெங்கட சமுத்திரம், பகுதியில் உள்ள கடை வீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடை களும் அடைக்கப்பட்டிருந்தன.
சாலையில் வாகன போக்கு வரத்து எதுவும் இல்லாமலும். மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி கிடந்தன. குறிப்பாக பொம்மிடி ரெயில் நிலையம் பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடந்தது.
பொம்மிடி தர்மபுரி சாலை, ஓமலூர் சாலை, சேலம் மெயின் ரோடு பகுதிகளிலும். பஸ் நிலையம் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் பூட்டி யே கிடந்தது. தருமபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடு பட்டனர்.