வைகாசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பவுர்ணமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வைகாசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வைகாசி பவுர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இன்று வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பவுர்ணமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் பகுதியில் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com