சிவராத்திரியை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிவராத்திரி விழாவில் தென்காசி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலின் ராஜகோபுரம் மற்றும் முக்கிய பகுதிகள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் தொடங்கிய சிவராத்திரி விழாவில் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

சிவராத்திரி விழாவில் தென்காசி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவிலின் பிரகார பகுதி மற்றும் முகப்பு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com