தேவதானப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி போலீசார் ஆலோசனை

தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி போலீசார் ஆலோசனை நடத்தினர்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் மாசிமகா சிவராத்திரி விழா வருகிற 1ம் தேதி முதல் 7ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவார்கள். இதுகுறித்து பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார், தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் வாடகை டாக்சி டிரைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தேவதானப்பட்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணியவேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com