அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைப்பு

சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைப்பு
Published on

சேலம்:

தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com