

கபிஸ்தலம்:
வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகா யேஸ்வரர் கோவில் (குரு தலம்) உள்ளது.
இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நகரின் முக்கிய பகுதியில் மதுபான கடை அமைந்துள்ளது.
இந்த கடை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.
மேலும் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கண்டித்து, உடன டியாக மதுக்கடையை அகற்றக்கோரி ஆலங்குடி ஊராட்சி தலைவர் வக்கீல் மோகன் தலைமையில், துணை தலைவர் ராசாத்தி சின்னப்பா மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.