திண்டுக்கல் அருகே பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்

2 நாட்களாக வாலிபரின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வாலிபர் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைபட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ரத்தினம் தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். சுரேஷ் குமார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சந்தேகம் அடைந்து தாலுகா போலீ சாருக்கு புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சுரேஷ்குமார் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எவ்வாறு இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com