தியாகதுருகம் அருகே வங்கி துணை மேலாளருக்கு கொலை மிரட்டல்:வாலிபர் கைது

ரமேஷ் வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.
தியாகதுருகம் அருகே  வங்கி துணை மேலாளருக்கு கொலை மிரட்டல்:வாலிபர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி பூங்குழலி (வயது 37) இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் ரமேஷ் (25) வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக்கு வந்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

பின்பு வேலை நேரம் முடிந்து வங்கி துணை மேலாளர் பூங்குழலி மற்றும் கல்விக்கரசி ஆகியோர் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் இவர்களை வழிமறித்த ரமேஷ் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துணை மேலாளர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com