புவனகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தவில் வாசிப்பவர் பலி

புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன்வண்டு ராயன்பட்டு சாலையில் சென்றார்
கலைவாணன்
கலைவாணன்
Published on

கடலூர்:

புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிரா மத்தை சேர்ந்தவர் கலை வாணன் (வயது 26). தவில் வாசிப்பவர். இவர் நேற்று இரவு புவன கிரிக்கு சென்று, இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வண்டு ராயன்பட்டு சாலையில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கலைவாணன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அவ்வழியே சென்ற வர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலைவாணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com