சாணார்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த மின் கம்பங்கள்

மின்கம்பங்கள் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.
சேதமடைந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.
Published on

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 4வது வார்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு 2 மற்றும் 4 வது வார்டில் 2 மின் கம்பங்கள்அதன் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே மின் கம்பம் உடைந்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com