சூறாவளி காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி:

தெற்கு வங்கக் கடலில் மையப் பகுதியில் குறைந்த அளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தூத்துக்குடி குமரிக் கடல் பகுதி தென் தமிழக கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அவ்வப்போது சுமார் 55 கிலோமீட்டர் வேகத்திலும் 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com