கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டம் முழுவதுமிருந்து மனுக்களுடன் குவிந்த பெண்கள்

கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மனு கொடுக்க ஏராளமான பெண்கள் வந்து வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மனு கொடுக்க ஏராளமான பெண்கள் வந்து வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் கோரிக்கை மனு அளிக்க திரண்டு வந்தனர். பெண்கள் மனு அளிக்க அதிகளவில் வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கொளுத்தும் வெயிலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து பதிவு செய்த மனுக்களை அதிகாரிகளிடம் வழங்குவதற்கு அலுவலக உள்ளே செல்லும் போது கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதற்கு நாற்காலி போடப்பட்டு அமரவைக்கப்பட்டனர். குறைதீர் முகாமிற்கு ஏராளமான பெண்கள் மனுக்களுடன் வந்ததால், கலெக்டர் அலுவலகமே பரபரப்பாக காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com