பெரியநாயக்கன்பாளையத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில் கடன் மேளா

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவுரையின் படி கடன் மேளா நடைபெற்றது. கடன் மேளாவில் ரூ.5 லட்சம் கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது
பெரியநாயக்கன்பாளையத்தில் கூட்டுறவு சங்கம் சார்பில் கடன் மேளா
Published on

கோவை,

பெரியநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் மேளா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவுரையின் படி கடன் மேளா நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பேராசிரியர்கள் வாசகராஜன் மற்றும் தணிகாசலம் ஆகியோர் கூட்டுறவு மேலாண்மை பற்றி விவரித்தார்கள், பெரியநாயக்கன்பாளையம் வட்டார அலுவலர்கள் பாரதி சிறப்புரையாற்றினார். பெரியநாயக்கன்பாளையம் கிளை மேலாளர் தேவராஜ், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெரியநாயக்கன்பாளையம் கிளை மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சங்கத்தின் துணைத்தலைவர் வேலுசாமி, செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடன் மேளாவில் ரூ.16 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டது. ரூ.5 லட்சம் கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com