

கோவை
சூலூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் அறிவுரைப்படி கடன் வழங்கும் மேளா நடந்தது.
விழாவுக்கு சங்க தலைவர் சி.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் எஸ்.ஏ.மோகன், அருண்குமார், எஸ்.வி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ரவிச்சந்திரன், திலகவதி, ரங்கநாயகி, காந்திமதி, சரோஜினி கடன் மேளா பற்றி சிறப்புரையாற்றினர். சங்க செயலாளர் ஜோதிமணி வரவேற்றார். சூலூர் வட்டார கள அலுவலர் ராமசாமி கடன் மேளாமற்றும் மின்னணு கல்விசார் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
இதில் டாப்செட்கோ 4 நபர்களுக்கு ரூ.2 லட்சமும், 15 நபர்களுக்கு ரூ.14.37 லட்சம் பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முடிவில் சங்க எழுத்தர் ராகவன் நன்றி கூறினார்.