பல்லடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
பல்லடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பல்லடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பல்லடம்,

பல்லடத்தில், வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு திறன் வளர்க்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படித்த 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினார்கள். இதையடுத்து வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிடும் வகையில் தமிழக அரசு 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 100 அரசு,மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 6-ந்தேதி தொடங்கி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com