கள்ளச்சாராயம், மது பாட்டில் பதுக்கிய 150 பேர் கைது

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம், மது பாட்டில் பதுக்கிய 150 பேர் கைது
Published on

சேலம்:

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து தமிழக முழுவதும் சாராயம் விற்பவர்களையும், போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள் .

இந்த நிலையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சேலம் புறநகர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மற்ற வகையில் 100 பேரும், மாநகரில் மது பாட்டில்களை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 50 பேரும் என 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இனி வரும் நாட்களிலும் தொடரும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com