துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம்: மாணவர்கள் தவிப்பு

மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.பட்டதாரிகள் பட்டய சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.
துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம்: மாணவர்கள் தவிப்பு
Published on

சென்னை:

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கவர்னருக்கும் அரசுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக துணை வேந்தரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த பிரச்சினை கோர்ட்டு வரை சென்றது. இதில் இன்னும் முடிவு காணப்படவில்லை.

துணைவேந்தரை நியமித்தால்தான் பட்டமளிப்பு விழாவுக்கு முறைப்படி அழைப்பு விடுத்து பட்டங்கள் வழங்க முடியும். இந்த தாமதத்தின் காரணமாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலை அறிவியல் பட்டதாரிகள் பட்டய சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.

துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கன்வீனர் குழு தற்போது பல்கலைக் கழகத்தை நடததி வருகிறது.

இந்த கமிட்டியில் பல் கலைக் கழகத்தில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லாத தும் ஒரு குறையாக உள்ள தாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக பல் கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, கல்வி விஷயங்கள் மற்றும் மாணவர்களின் பிற நட வடிக்கைகள் பாதிக்கப்படுவ தாகவும் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com