நுகர்வோர் குறைதீர் கூட்டம்

ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு பலகை வைக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு கூட்டம் அனைத்து தன்னார்வ அமைப்புகளை கொண்டு நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்ட வழங்க அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் நுகர்வோர் மைய செயற்குழு உறுப்பினர் துரை. ராயப்பன், முருகானந்தம், கலா, சரோஜினி அண்ணாதுரை, அரிமா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், அனுமதி இல்லாத இடத்தில் கேஸ் சிலிண்டர் விற்பதை தடை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு அறிவுப்பு பலகையும், குறைகள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும், விடுமுறை நாட்கள் மற்றும் பணி நேரம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் நாகராஜன் தலைமையில் வட்ட வழங்க அலுவலர் மதியழகனிடம் அளிக்க ப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com