தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி

சவரிமுத்து தூத்துக்குடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி
Published on

தூத்துக்குடி :

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கட்டளை நடுத்தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது39). கட்டிட தொழிலாளி.

தவறிவிழுந்து பலி

இவர் தூத்துக்குடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாப உயிரிழந்தார். இது தொடர்பாக வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ் பெக்டர் மாணிக்க ராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலி தொழிலாளி

இதேபோல ஓட்டப்பிடாரம் கே. சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜசேகர் (44) அளவுக்கு அதிகமாக மது குடித்தும், சரியாக சாப்பிடாமல் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே போல்பேட்டை குடோன் பகுதியில் வந்தபோது அவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com