மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
Published on

ஓசூர்,

ஓசூரில், தமிழக மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், பல்வேறு தொழிற்சங்கத்தினர், கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com